- திருப்புத்தூர்
- கீசாச்சிவல்பட்டி
- Tirunavukarasu
- லெட்சுமி
- கீசச்சிவல்பட்டி
- மதுரை
- லட்சுமி
- கீச்சிவால்பட்டி
திருப்புத்தூர், நவ.28: திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார். திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி லெட்சுமி(46). தற்போது குடும்பத்துடன் மதுரையில் குடியிருந்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் லட்சுமி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக கீழச்சிவல்பட்டிக்கு வந்துள்ளார். வீட்டின் பின்புறத்தில் புற்கள் அதிகமாக முளைத்திருந்ததால் அதை கையால் பிடுங்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தரையில் இருந்த எர்த் கம்பியை பிடித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மின்சாரம் தாக்கி பெண் பலி appeared first on Dinakaran.