- டிஒய் சந்திரசூட்
- சஞ்சய் ராவத்
- புது தில்லி
- முன்னாள்
- தலைமை நீதிபதி
- சஞ்சய் ரவுத்
- மகா விகாஸ் அகதி
- மகாராஷ்டிரா சட்டமன்றம்
- தின மலர்
புதுடெல்லி: எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதை கட்சியோ, தனி நபரோ தீர்மானிக்க முடியாது என்று சஞ்சய் ராவத்தின் புகாருக்கு முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதிலளித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் எதிர்கட்சியான மகா விகாஸ் அகாதியின் படுதோல்வி அடைந்த நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், கடந்த சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், ‘உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வழக்கை விரைந்து விசாரிக்கவில்லை.
ஓய்வுபெற்ற அவரது பெயர் கருப்பு எழுத்துகளால் எழுதப்படும்’ என்றார். இவரது கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அளித்த பேட்டியில், ‘ஆண்டு முழுவதும், அடிப்படை மற்றும் அரசியலமைப்பு ெதாடர்பான வழக்குகளை விசாரித்து தீர்த்து வருகிறோம். 9 நீதிபதிகள், 7 நீதிபதிகள் மற்றும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் வந்த வழக்குகளுக்கும் தீர்வு காணப்படுகிறது. எந்த வழக்கை எப்போது விசாரிக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தான் தீர்மானிக்க முடியும்.
அந்த முடிவை எடுக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது. எனவே எந்தவொரு நபரோ அல்லது கட்சியோ தீர்மானிக்க முடியாது. நீதிபதிகளை விமர்சிக்கலாம்; முக்கியமான அரசியலமைப்பு வழக்குகள் கூட கடந்த 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 20 ஆண்டுகள் பழமையான இந்த வழக்குகளை ஏன் எடுத்து விசாரிக்கவில்லை என்றும் கூறலாம். பழைய வழக்குகள் விசாரிக்கப்பட்டால், நீதிமன்றம் சமீபத்திய வழக்கை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. எனது பதவிக்காலத்தில் 38 அரசியலமைப்பு வழக்குகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன’ என்றார்.
The post எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதை கட்சியோ, தனி நபரோ தீர்மானிக்க முடியாது: சஞ்சய் ராவத் புகாருக்கு டி.ஒய்.சந்திரசூட் பதில் appeared first on Dinakaran.