×
Saravana Stores

ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் வரத்து பொய்கை மாட்டுச்சந்தையில் ₹1.50 கோடிக்கு வர்த்தகம்

*வியாபாரிகள் மகிழ்ச்சி

வேலூர் : வேலூர் அருகே பொய்கை மாட்டுச்சந்தைக்கு நேற்று ரூ.1.50 கோடிக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தமிழகத்தில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் கறவை மாடுகள், காளைகள், எருமைகள், மற்றும் ஆடு, கோழிகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பொய்கை மாட்டு சந்தை விற்பனை களைக்கட்டியது. நேற்று வழக்கம் போல் பொய்கை மாட்டுச்சந்தை செயல்பட்டது. கடந்த வாரத்தை விட நேற்று அதிகளவில் மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘மழை இல்லாத காரணத்தினால் நேற்று 1000க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனை கொண்டு வரப்பட்டது. இதில் 900க்கும் மேற்பட்ட மாடுகள் சுமார் ரூ.1.50 கோடிக்கு விற்பனையானது. இனி வரும் வாரங்களில் பொய்கை மாட்டு சந்தைக்கு கால்நடைகளின் வரத்து அதிகரிக்கும்’ என்றனர்.

The post ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் வரத்து பொய்கை மாட்டுச்சந்தையில் ₹1.50 கோடிக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.

Tags : Poigai Cattle Market ,Andhra Pradesh ,Karnataka ,Vellore ,Poikai cattle market ,Tamil Nadu ,
× RELATED சபரிமலை சீசன் துவங்கியதால் பொள்ளாச்சி மாட்டு சந்தையில் விற்பனை மந்தம்