திருக்காட்டுப்பள்ளி, நவ.27: பூதலூர் தாலுக்கா பகுதியில் தொடர் மழையினால்பொ துமக்களின் இயல்பு வாழ் க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பூதலூர், அதனை சுற்றியுள்ள செங்கிப்பட்டி, திருக்காட்டுப் பள்ளி, கல்லணை ஆகிய பகுதிகளில் நேற்று காலை 6 மணி முதல் அனைத்து பகுதிகளிலும் லேசான மழை பெய்து கொண்டே இருந்தது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஏற்ற மழையாக இருந்தாலும் நடவு பணி செய்யவோ, களை எடுக்கவோ முடியாமல் சிறமப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். திருக்காட்டுப் பள்ளிகடை வீதியிலும், பூதலூர், மற்றும் செங்கிப் பட்டி பகுதியிலும், கடைவீதியிலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. அதேபோன்று தறைக்கடை வியாபாரிகள், காய்கனி வியாபாரிகள் வியாபாரம் இன்றி கவலையடைந்தனர்.
காய்கனி மார்க்கெட்டுகளில் காய், கனிவிலை சற்று உயர்ந்தே காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர் மழையின் காரணமாகஆறுகளில் தண்ணீர் திறப்பின்றி உள்ளது. தொடர் மழையின் காரணமாக மக்கள் மட்டுமல்லாமல் கால்நடைகள், விலங்குகள், பறவைகள், அனைத்தும் குளிர் தாங்க முடியாமல் தவித்து வருகின்றது. வானிலை மையம் கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என தெரிவித்திருந்தது ஆனால் இப்பகுதிகளில் மே மூட்டத்துடன்தொடர்ந்து லேசான மழை பெய்து கொண்டே உள்ளது.
The post பூதலூர் தாலுக்கா பகுதியில் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.