- சேலம்
- ட்ரீம் ஹவுஸ்
- சேலம் மாவட்டம்
- காடையம்பட்டி
- டானிஷ்பெட்
- `கலைஞரின் கனவு இல்லம்
- `கலைஞரின்
- வீட்டில்
- தின மலர்
சேலம், நவ.27:சேலம் மாவட்டத்தில் `கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் 3,500வீடுகள் கட்ட ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த டேனிஷ்பேட்டையில் `கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை கலெக்டர் பிருந்தாதேவி நேற்று நேரில் ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-2025ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காகவும், ஊரக பகுதிகளில் உள்ள குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் அமைத்து தருவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
சேலம் மாவட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 1,603குடிசைகள், புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பில் 927குடிசைகள், அனைவருக்கும் வீடு திட்டத்தில் 1,777 குடிசைகள் என மொத்தம் 4,307 குடிசைகள் கண்டறியப்பட்டு, முதற்கட்டமாக வீடுகள் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது 20 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3,500 வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என 4 தவணைகளில் வங்கி கணக்கின் மூலம் தொகை நேரிடையாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post `கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 3,500 வீடுகள் கட்ட ஒதுக்கீடு ஆணைகள்: கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.