×
Saravana Stores

மதுரை வேளாண் கல்லூரியில் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கம்

 

மதுரை, நவ. 27: மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேனீ வளர்ப்பு குறித்து மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கு நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் மகேந்திரன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார். இந்த கருத்தரங்கில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருந்துநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த தேனீ வளர்ப்போர் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் ஏறாளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தேசிய தேனீ வாரியம் சார்பில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி கையேடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்க வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் வேளாண் கல்லூரி முதல்வர் மகேந்திரன் பேசுகையில்,‘‘நமது வாழ்வு மேம்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறோம். இதில் தேனீ வளர்ப்பு ஒரு ஆர்வமுள்ள தொழிலாக செய்யலாம். கிராமப் புறத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க தேனீ வளர்ப்பு ஒரு அருமையான வாய்ப்பு. ஆர்வமுடன் செய்தால் தேனீ வளர்ப்பு ஒரு லாபகரமான தொழிலாக அமையும் என்றால்.

நல்ல முறையில் தேனீ வளர்க்கும் போது வௌிநாடுகளுக்கு ஏற்று மதி செய்ய வாய்ப்பு உள்ளது’’ என்றார். பின்னர் வேளாண் இணை இயக்குனர் பேசுகையில்,‘‘விவசாயம் நடைபெறக்கூடிய இந்த சமயத்தில் பல்வேறு பணிகளை விட்டுவிட்டு தேனீ வளர்க்கும் ஆர்வத்தில் இங்கு வந்துள்ள உங்களுக்கு என் சார்பிலும் விவசாய கல்லூரி சார்பிலும் நன்றிகளை ெதரிவித்துக்கொள்கிறேன்’’என்றார். மேலும், இந்நிகழ்ச்சியில் பூச்சிகள் துறை தலைவர் பேராசிரியர் சந்திரமணி, இணை பேராசிரியர் சுரேஷ், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் புவனேஸ்வரி, உள்ளிட்டோர் மற்றும் விவசாயிகள் தேனீ வளர்ப்போர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் இணை பேராசிரியர் உஷாராணி நன்றியுரை வழங்கினார்.

The post மதுரை வேளாண் கல்லூரியில் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : State Level Beekeeping ,Madurai Agricultural College ,Madurai ,Research Institute ,Madurai Agricultural College and ,Dinakaran ,
× RELATED மோசமான வானிலை – மதுரை வானில் வட்டமடித்த விமானம்