×
Saravana Stores

சாலையோரம் வீசப்பட்ட மருந்து, மாத்திரைகளால் பரபரப்பு

 

ஈரோடு, நவ. 27: ஈரோட்டில் சாலையோரம் வீசப்பட்ட மருந்து, மாத்திரைகளால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர் தெப்பக்குளம் வீதியில் நேற்று மருந்து, மாத்திரைகள் குவியலாக கொட்டப்பட்டிருந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் சாலையோரம் வீசப்பட்ட மருந்து, மாத்திரைகள் காலாவதியானவையா? என கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

ஆனால், அந்த மாத்திரைகள் அடுத்த ஆண்டு (2025) வரை பயன்படுத்தக்கூடியது என்பதும், அந்த மாத்திரைகள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரைகள் மற்றும் மருந்துகள் என்பதும் தெரியவந்தது. காலாவதியாகாமல் சாலையோரம் வீசப்பட்டதற்கான காரணம் என்ன?, இவை தனியார் மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையின் பணியாளர்கள் மூலம் கொட்டப்பட்டவையா ? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலையோரம் வீசப்பட்ட மருந்து, மாத்திரைகளால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Thillai Nagar Theppakulam road ,Erode Corporation ,Dinakaran ,
× RELATED சொத்துவரி குறைவாக விதித்த...