×
Saravana Stores

கட்டிட பணியில் தவறி விழுந்து கொத்தனார் பலி

கோவில்பட்டி, நவ. 27: கோவில்பட்டி அருகே உள்ள கட்டாரங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பாலு (68). கொத்தனார். இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு ராஜா (45), கண்ணன் என 2 மகன்களும், பிரியா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டார். பாலு நேற்று சரவணாபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த வள்ளிராஜ் (49) என்பவரது வீட்டில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர், எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கட்டாரங்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த மேஸ்திரி ராமலிங்கம் (52) நாலாட்டின்புத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டிட பணியில் தவறி விழுந்து கொத்தனார் பலி appeared first on Dinakaran.

Tags : Mason ,Kovilpatti ,Balu ,Katarangulam South Street ,Santa ,Raja ,Kannan ,Priya ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த...