- பஞ்சாயத்து
- கலியாக்கவிளை
- மார்த்தாண்டம்
- ஜெகன்
- மெடுகும்மல் தட்டான்விலை
- கலியகவிளை
- அகிலா
- மேடுகும்மல் பஞ்சாயத் அலுவலகம்
- ரவீந்திரன்
- ஓடன்வ்லய்
மார்த்தாண்டம், நவ.27: களியக்காவிளை அருகே மெதுகும்மல் தட்டான்விளையை சேர்ந்தவர் ஜெகன். அவரது மனைவி அகிலா (40). மெதுகும்மல் ஊராட்சி அலுவலகத்தில் கணக்கராக பணி புரிந்து வருகிறார். ஓடான்விளையை சேர்ந்தவர் ரவீந்திரன் (59). ஆட்டோ டிரைவர். இவருக்கும், ஜெகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று காலை ஜெகன் ஓடான்விளை பகுதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரவீந்திரன் திடீரென ஜெகனை கம்பால் அடித்து உதைத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த ஜெகன் அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அகிலா களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் ரவீந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post களியக்காவிளை அருகே ஊராட்சி கணக்கரின் கணவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.