×
Saravana Stores

வேடநத்தம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

குளத்தூர், நவ. 26: குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு குளத்தூர் காவல் நிலையம் சார்பில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் இக்னேசியஸ் தலைமை வகித்து பேசினார். பொறுப்பு ஆசிரியை யசோதா முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயா வரவேற்றார். குளத்தூர் எஸ்ஐ முத்துராஜா கலந்து கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவி பார்கவிக்கு பரிசுக்கோப்பை வழங்கி பாராட்டி பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கான பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, வினாடி, வினா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். ஆசிரியை லலிதாம்பிகா நன்றி கூறினார்.

The post வேடநத்தம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் மாணவர்களுக்கு பரிசு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Vedanantham Government School ,Kulathur ,Kulathur police station ,Vedanantham Government Higher Secondary School ,Headmaster ,Ignatius ,Dinakaran ,
× RELATED குளத்தூர் அண்ணாநகர் காலனியில்...