×
Saravana Stores

தூத்துக்குடி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி, நவ. 26: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதனால் தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 55 கிமீ வேகம் வரை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இதுகுறித்து கப்பல்களுக்கும், மீனவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

The post தூத்துக்குடி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் appeared first on Dinakaran.

Tags : 1st Storm Warning Cage ,Port of Tuticorin ,Thoothukudi ,Tuticorin Wauxi port ,Storm Warning Cage ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி சங்கரப்பேரியில்...