×
Saravana Stores

சிறுமி பலாத்கார வழக்கில் புதுவை முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி, நவ. 26: புதுச்சேரியில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரி பிரியதர்ஷினி நகர், கே.டி.தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி என்ற குருராஜ் (67). இவர் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும் கூலித்தொழிலாளி. கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தோணி மீது ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தோணி மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார். விசாரணை நேற்று முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அந்தோணி என்ற குருராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹11 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுமதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ₹4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட அந்தோணி என்ற குருராஜ் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

The post சிறுமி பலாத்கார வழக்கில் புதுவை முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Puduwai ,Puducherry ,POCSO court ,Gururaj ,Anthony ,Priyadarshini Nagar ,KD Thotam ,
× RELATED நுண்கலை மாணவர்களுக்காக 3 நாட்கள்...