மார்த்தாண்டம் நவ.26: மார்த்தாண்டம் பகுதி தேசிய நெடுஞ்சாலை பல்லாங்குழிகளாக பரிதாபமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியது. இருப்பினும் கண்டு கொள்ளவில்லை. இதனால் நாளை (27ம் தேதி) கடையடைப்பு மற்றும் மறியல் நடைபெறுகிறது. மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகிக்கிறார். செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார், பொருளாளர் வில்சன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா, மண்டல தலைவர் வைகுண்ட ராஜா, மேற்கு மாவட்ட தலைவர் அல் அமீன், கிழக்கு மாவட்ட தலைவர் பாபு, மேற்கு மாவட்ட செயலாளர் ரவி, மாநில துணைச் செயலாளர் விஜயன், மற்றும் 50 கிளைச் சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
The post மார்த்தாண்டத்தில் நாளை வர்த்தக சங்க கடையடைப்பு போராட்டம் 50 சங்கங்கள் ஆதரவு appeared first on Dinakaran.