×
Saravana Stores

ஐஜிஜி நோய் எதிர்ப்பு திறன் அளவு அதிகரிப்பால் டெங்கு பாதிப்பு குறைந்தது: தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை தகவல்

சென்னை: உலகளவில் டெங்கு பாதிப்பு குறைந்ததற்கு ஐஜிஜி நோய் எதிர்ப்பு திறன் அளவு அதிகரிப்பே காரணம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார ஆய்வகம், நோய் எதிர்ப்பு சக்தியை கணக்கிடும் ​செரோ சர்வேவை நடத்தியது. தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 5 ஆயிரத்து 577 மனிதர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதற்கான ஆய்வு முடிவுகளை தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா தொற்று காலத்தில் உலக அளவில் டெங்கு பாதிப்பு குறைந்ததற்கு ஐஜிஜி நோய் எதிர்ப்பு திறனின் அளவு அதிகரிப்பு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, உலக அளவில் 2023ம் ஆண்டில் டெங்கு பாதிப்புகள் 6 மில்லியன் அளவில் பதிவாகி இருப்பதாக கூறியுள்ளது. எனினும், எல் நினோ சுழற்சி, நகரமயமாக்கல், மக்கள்தொகை அடர்த்தி, சுத்தமற்ற சுற்றுப்புறத்தால் கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் பரவலும் இருப்பதாக சுகாதாரத்துறையின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

The post ஐஜிஜி நோய் எதிர்ப்பு திறன் அளவு அதிகரிப்பால் டெங்கு பாதிப்பு குறைந்தது: தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Dengue ,Tamil Nadu Public Health Department ,CHENNAI ,Tamil Nadu Public Health Laboratory ,Tamil Nadu ,
× RELATED டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை: மருத்துவமனை நிர்வாகம்