×
Saravana Stores

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.. இன்று இரவில் இருந்து கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

டெல்லி: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு-இலங்கை கடலோர பகுதியை நோக்கி நகரக் கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு முதல் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.. இன்று இரவில் இருந்து கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Weather Center ,Delhi ,Indian Meteorological Survey ,South Bank ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை 3% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம்