இது தொடர்பாக, சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்க சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர்கள் (வடக்கு மற்றும் தெற்கு), 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை-600001 என்ற முகவரிக்கு 23.11.2024 (நேற்று) தேதிக்குள் அனுப்ப வேண்டும் என ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் கால அளவு 10.12.2024 வரையில் நீட்டிப்பு செய்யப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் தகுதி பெற 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது, அந்த தகுதி நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
* பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
* கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.
* சென்னையில் குடியிருக்க வேண்டும். இதற்கென, சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் தமிழ்நாடு அரசு CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும். எனவே, சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை டிசம்பர் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.