அதன்பேரில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் நேற்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், நீதிமன்றம் சார்பில் அமைக்கப்பட்ட ஒன்றிய அரசு அதிகாரிகள் குழுவினர் 11 பேர், போலீசாருடன் 3 கார்களில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை முதலில் ஆய்வு செய்தனர். பின்னர் பால், நெய் உள்பட பல்வேறு உணவுப்பொருட்களின் தரம் குறித்து சோதனை செய்தனர். பகல் 1 மணிக்கு வந்த அதிகாரிகள் இரவு 7 மணி வரை சுமார் 6 மணி நேரம் சோதனை நடத்தி ஊழியர்களிடம் விசாரித்தனர். பின்னர் வெளியே சென்ற அதிகாரிகள், இரவு 9 மணியளவில் மீண்டும் நிறுவனத்துக்கு சென்று விசாரணையை தொடர்ந்தனர்.
The post திருப்பதி லட்டில் கலப்பட நெய் விவகாரம் ஏஆர் டெய்ரி புட் நிறுவனத்தில் ஆந்திர அதிகாரிகள் சோதனை: 6 மணி நேரத்துக்குமேல் விசாரணை appeared first on Dinakaran.