- சடையங்குப்பன்
- திருவொற்றியூர்
- புஜால் ஏரி
- சடயன்குப்பம்
- பர்மா நகர்
- எலந்தனூர்
- சென்னை மணலி மண்டல்
- தின மலர்
திருவொற்றியூர்: சென்னை மணலி மண்டலம் 16வது வார்டில் பர்மா நகர், சடையன்குப்பம் மற்றும் எலந்தனூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்துவருகின்ற மக்கள், திருவொற்றியூர் பகுதிக்கு எளிதாகவரும் வகையில் சடையன்குப்பம் அருகே உள்ள புழல் ஏரி உபரி நீர் கால்வாய் மீது மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், கால்வாய் மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளதால் இருள்சூழ்ந்து இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. இதுதவிர வழிப்பறி உள்ளிட்டவைகளும் அடிக்கடி நடைபெறுகிறது.
இதனால் கால்வாய் மேம்பாலம் மீது விளக்கை அமைக்கவேண்டும் என்று வார்டு கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ஜெயராமன் ஆகியோர் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தெருவிளக்கு பிரிவு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுசம்பந்தமாக தமிழ்முரசு நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேம்பாலம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு மாநகராட்சி மின் பிரிவு மேற்பார்வை பொறியாளர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்போது மேம்பாலத்தின் மீது தற்காலிகமாக 8 சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுவந்ததால் தற்காலிகமாக சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு எல்இடி விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
The post சடையன்குப்பன் மேம்பாலத்தில் சோலார் விளக்குகள் அமைப்பு appeared first on Dinakaran.