×
Saravana Stores

மகப்பேறு நிதி முறைகேடு விவகாரம் 3 வட்டார மருத்துவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் மாவட்ட மருத்துவ அலுவலர் அனுப்பினார்

 

புதுக்கோட்டை, நவ.23: புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்ட நிதியில் முறைகேடு விவகாரத்தில் 3 வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர் என 4 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு அரசின் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் போலிப் பயனாளிகள் பட்டியல் தயாரித்து ரூ.18.60 லட்சம் முறைகேடாக 16 வங்கிக் கணக்குகளில் போடப்பட்டது. இது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில், இளநிலை உதவியாளர் வெங்கடேஷ்குமார், வட்டார கணக்கு உதவியாளர் வருண் ஆகியோர் மீது மாவட்ட சுகாதார அலுவலர் ராம்கணேஷ், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வெங்கடேஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து வருணை நிறந்தர பணி நீக்கம் செய்தும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2019ம் ஆண்டில் இருந்து 2024 வரை 5 ஆண்டுகளில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக அந்தக் காலகட்டத்தில் பணியாற்றிய வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தனர். இதன் பிறகு வட்டார மருத்துவர்கள் தர், ரகுவரன், பழனிவேல்ராஜன் மற்றும் கண்காணிப்பாளர் சுந்தராஜன் ஆகிய 4 பேரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட மருத்துவ அலுவலர் ராமுகணேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்படி போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கு தொடர்பு உள்ளது, எந்தெந்த வக்கி கணக்கிற்கு பணம் சென்றுள்ளது. பயனாளிகள் இல்லாதவர்களின் வங்கி விபரம் எப்படி வங்கிக்கு சென்றது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

The post மகப்பேறு நிதி முறைகேடு விவகாரம் 3 வட்டார மருத்துவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் மாவட்ட மருத்துவ அலுவலர் அனுப்பினார் appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,District Kadiapati Regional Government Primary Health Center ,Dinakaran ,
× RELATED ‘300வது திருட்டு வெற்றி பெற...