சிவகங்கை, நவ. 23: சிவகங்கை மாவட்டத்தில் இன்று (நவ. 23) 445 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம், அன்றை தினத்திற்கு பதிலாக இன்று நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை, ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் இன்று காலை 11 மணியளவில் நடக்க உள்ளது.
கூட்டத்தில் ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தூய்மை பாரத இயக்க(ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன் தயாள் உபாத்யாய் கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு மற்றும் கூட்டாண்மை வாழ்வாதாரம் ஆகியவை கிராம சபை கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்படவுள்ளது. எனவே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post 445 ஊராட்சிகளில் இன்று கிராம சபைக்கூட்டம் appeared first on Dinakaran.