×
Saravana Stores

கோழிப்பண்ணையால் ஏமாந்த பெண் ரூ.4.50 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

மதுரை, நவ. 23: மதுரை, கருப்பாயூரணியை அடுத்த காளிகாப்பானை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் சௌமியா(31). எம்பிஏ பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது மதுரை கோச்சடையை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர், கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருவதாகவும் பணம் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாகவும், ஆன்லைனில் கூறியிருந்தார்.

இதையடுத்து அவரை தொடர்பு கொண்ட சௌமியா, இரு தவணைகளாக ரூ.4.50 லட்சத்தை அவரிடம் கொடுத்ததாக தெரிகிறது.  இதில் முதலில் லாப தொகையை கொடுத்த அவர், பின்னர் அதனை தரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சௌமியா அசலை கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சௌமியா அளித்த புகாரின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவின்படி எஸ்.எஸ்.காலனி போலீசார் சதீஸ்குமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post கோழிப்பண்ணையால் ஏமாந்த பெண் ரூ.4.50 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Govindaraj ,Soumya ,Kaligapan ,Karupayurani, Madurai ,Chennai ,Satish Kumar ,Gochadai, Madurai ,Dinakaran ,
× RELATED முதியவர் கொலை வழக்கில் மாஜி ராணுவவீரருக்கு 10 ஆண்டு சிறை