சேந்தமங்கலம், நவ.23: புதுச்சத்திரம் அருகே, நவணி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, புதுச்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், எஸ்ஐ அனிபில்ராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். அப்போது, ஒரு பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஓலப்பாளையத்தைச் சேர்ந்த சீனிவாசன்(65) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது appeared first on Dinakaran.