நாகர்கோவில், நவ. 23: திங்கள்நகர் பேருந்து நிலையம் எதிரில் மார்த்தாண்டம் ரோட்டரி சங்க தலைவர் சரவணன் ஏழைகளுக்கு உதவும் வகையில் அலமாரி ஒன்றை அமைத்துள்ளார். அதில், இருப்பவர்கள் வைத்து கொள்ளுங்கள். தேவைப்படுபவர்கள் எடுத்து கொள்ளுங்கள் என்ற விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த அலமாரியில் உணவு உள்ளிட்ட பொருட்களை பலரும் வைத்து வருகிறார்கள். அதனை தேவைப்படும் ஏழைகள், முதியவர்கள் எடுத்து சென்று பயன்படுத்தி வருகிறார்கள். இது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதுடன், பலரும் பாராட்டி வருகிறார்கள்.
The post திங்கள்நகரில் ஏழைகளுக்கு உதவும் வகையில் அலமாரி appeared first on Dinakaran.