- கோவா நாடகா
- சீமன்
- கோவாய்
- தமிழ் கட்சி
- கோவா வடக்கு மாவட்ட செயலா
- கோவாய் பிரஸ் கிளப்
- கோவா வட மாவட்டம்
- ராமச்சந்திரன்
- பெண்கள் அணி
- தின மலர்
கோவை: நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து கூண்டோடு வெளியறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பிரஸ் கிளப்பில் நாம் தமிழர் கட்சி கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மகளிர் அணி மாவட்ட செயலர் கே.அபிராமி, வணிகர் பாசறை செயலர் பி.செந்தில்குமார், தொழிற்சங்க செயலர் ஏழுமலை பாபு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கட்சி மீது அதிருப்தியில் இருக்கிறோம். இதனால், கட்சியில் இருந்து வெளியேறுகிறோம்.
தற்போது 20 பொறுப்பாளர்கள் ஒட்டு மொத்தமாக வெளியேறுகிறோம். சீமானின் பேச்சு முன்னுக்கு பின்னாக இருக்கிறது. அவரது கொள்கைக்கும், நடைமுறைக்கும் வித்தியாசம் உள்ளது. கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் கட்சியில் யாரை தொடர்பு கொள்வது என்றே தெரியவில்லை. தென் மாவட்டத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே பிரிவு ஏற்படுத்தும் வகையில் சீமான் பேசுகிறார். கொங்கு மண்டலத்தில் அருந்ததியரை வந்தேறிகள் என்கிறார். இதுபோன்ற செயல்பாடுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் வெற்றியை நோக்கிய பயணமாக இல்லை. சீமானைவிட விஜய் பெரிய ஆளில்லை. அவரின் பின்னால் நாங்கள் செல்ல வேண்டியது இல்லை. சீமானின் பேச்சு, கருத்தியலை பார்த்துதான் கட்சிக்கு வந்தோம். ஆனால், அவரது செயல்பாடு அப்படி இல்லை. நான் எடுப்பதுதான் முடிவு. இருந்தால் இருங்கள், இல்லாவிட்டால் வெளியேறுங்கள் என்கிறார். கட்சி நிர்வாகிகளிடம் இரண்டு வருடமாக கருத்தே கேட்பதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post கோவை நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்: இரு சமூகத்துக்கு இடையே மோதலை சீமான் உருவாக்குவதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.