×
Saravana Stores

காலிஃபிளவர் கடப்பா

தேவையானவை

கடலை மாவு – 100 கிராம்,
காலிஃபிளவர் – ஒரு பூ,
பச்சைமிளகாய் – 5,
வேகவைத்த உருளைக்கிழங்கு – 1,
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்,
பட்டை, அன்னாசி பூ,
ஏலக்காய்,
கிராம்பு,
கசகசா,
மஞ்சள் தூள் – தேவையான அளவு,
வெங்காயம் – 1, உப்பு,
எண்ணெய், மல்லித்தழை, பெருங்காயம் – தேவைக்கு.

செய்முறை

மசாலாப் பொருட்களை நெய்விட்டு வதக்கி, காலிஃபிளவரை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி, பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி போட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட், வேகவைத்த உளுளைக்கிழங்கு மசித்து, கடலைமாவில் மஞ்சள் தூள் கலந்து நீர் விட்டு கரைத்து வதக்கிய காலிஃபிளவர், கடலைமாவு ஊற்றி கிளறி, கட்டி பிடிக்காமல் கொதிக்க விடவும். மல்லித்தழை, பெருங்காயம் போட்டு இறக்கவும். சுவையான கடப்பா ரெடி. தோசை, பூரி தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

The post காலிஃபிளவர் கடப்பா appeared first on Dinakaran.

Tags :
× RELATED இனிப்பு முறுக்கு