×
Saravana Stores

சிக்கன் சாம்பார்

தேவையானவை:

1 கப் துவரம் பருப்பு,
1 கப் மசூர் பருப்பு,
1/4 கப் கடலைப்பருப்பு ,
1/4 கப் பாசிப்பருப்பு,
1/2 ஸ்பூன் பெருங்காயம்,
1 ஸ்பூன் மஞ்சள் தூள்,
4 கப் தண்ணீர்,
கடுகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்

மசாலாவிற்கு:

1கப் நறுக்கிய வெங்காயம்
1/2 கப் நறுக்கிய தக்காளி
2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
3-4 பச்சை மிளகாய்
2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
1/2 ஸ்பூன் சீரகத்தூள்
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழம் சாறு
1/2 ஸ்பூன் கரம் மசாலா
1/2 கப் புதினா
1/2 கப் கொத்தமல்லி
தேவையானஅளவு உப்பு
தேவையானஅளவு எண்ணெய்
1 அங்குலம் பட்டை 3லவங்கம்
1 ஸ்பூன் மிளகு 200-250 கிராம்
சிக்கன்

செய்முறை:

ஸ்டெப் 1 பிரஷர் குக்கரில் அனைத்து பருப்புகளையும் சேர்க்கவும். இதில் மஞ்சள், பெருங்காயம் மற்றும் தண்ணீர் சேர்த்து சுமார் 3 விசில் வரை சமைக்கவும். குளிர்ந்ததும், பருப்பை நன்றாக கலந்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்கவும், எண்ணெய் சூடானதும், கடுகு, சீரகம், சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் பொன்னிறமான உடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். பின்னர் தக்காளி சேர்க்கவும் உடன் அனைத்து உலர்ந்த மசாலாவையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் சிக்கன் சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் ஊற்றி மூடி வைத்து குறைந்தது ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும். நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். இப்போது கொதித்துக் கொண்டிருக்கும் சிக்கன் கலவையில் உப்பு மற்றும் பருப்பு கலவையை சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து இறுதியாக, எலுமிச்சை சாறு சேர்க்கவும். கொத்தமல்லி இலை தூவி சூடாக சாதத்துடன் அல்லது சப்பாத்தி தோசையுடன் பரிமாறவும். எலுமிச்சை சுவை தொண்டையில் இறங்கும் போது இன்னும் சுவை கூட்டி காட்டும்.

The post சிக்கன் சாம்பார் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED மழைக்கால சருமப் பராமரிப்பு!