×
Saravana Stores

பூண்டு சட்னி

தேவையான பொருட்கள்

பூண்டு – 50 கிராம்
குழம்பு மிளகாய் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – ஒரு குழிக கரண்டி
கடுகு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லி – ஒரு கொத்து.

செய்முறை:

பூண்டை மேல்தோல் மட்டும் உரித்து மிக்ஸியில் போடவும். அதனுடன் குழம்பு மிளகாய் தூள் , மஞ்சள்த்தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் 50 மிலி தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த மசாலாவை சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும். சுவையான திடீர் பூண்டு சட்னி தயார்.

The post பூண்டு சட்னி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED மழைக்கால சருமப் பராமரிப்பு!