- யானை
- சபரிமலை
- திருவனந்தபுரம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆந்திரப் பிரதேசம்
- தெலுங்கானா
- கர்நாடக
- சபர்மதி அய்யப்பன் கோயில்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் லாஹா வழியாக பக்தர்கள் தங்களது வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மஞ்சத்தோடு பகுதியில் திடீரென யானைக் கூட்டம் ரோட்டுக்கு வந்தது. அதைப் பார்த்த அந்த வழியாக வந்து கொண்டிருந்த பக்தர்கள் உடனடியாக தங்களது வாகனங்களை நிறுத்தினர். சிறிது நேரம் அந்த யானைகள் ரோட்டிலும், ரோட்டின் ஓரத்திலும் நின்று கொண்டிருந்தன. இதனால் பக்தர்கள் பீதியடைந்தனர். அரை மணி நேரம் கழித்து யானைகள் சென்றபின் பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.
The post சபரிமலையில் பக்தர்களை அச்சுறுத்திய யானை கூட்டம் appeared first on Dinakaran.