- மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார்
- மேற்கு வங்கம்
- கொல்கத்தா
- மூர்ஷிதாபாத்
- பெல்டாங்கா
- மாநில மத்திய அமைச்சர்
- சுகந்தா மஜும்தார்
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஒன்றிய இணையமைச்சர் சுகந்தா மஜூம்தார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேற்குவங்கமாநிலம்பெல்டாங்காவை ஒட்டியுள்ள முர்ஷிதாபாத்தில் வன்முறை வெடித்தது. இதில் இருசமூகங்கள் மோதியதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியை பார்வையிட நேற்று மேற்குவங்க பாஜ மாநிலத் தலைவரும், ஒன்றிய கல்வித்துறை இணைஅமைச்சருமான சுகந்தா மஜும்தார் சென்றார். அவரை வழிமறித்த மேற்குவங்க போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.
The post மேற்குவங்கத்தில் ஒன்றிய இணையமைச்சர் சுகந்தா மஜூம்தார் அதிரடி கைது appeared first on Dinakaran.