×

ஷாருக்கான், விஜய் சேதுபதி நடித்த ஜவான் பட ரிலீஸ் தேதி மாற்றம்

மும்பை: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த படம் முதலில் ஜூன் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வெளியீட்டுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் படத்தின் டீசர், டிரெய்லர் என எதுவும் வெளியாகாததால் ஜவான் சொன்ன தேதியில் வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பமடைந்தனர். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தாமதமாகி வருகின்றன.

இதனால் ஜூன் 2ம் தேதிக்கு பதிலாக படம் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாகிறது. இந்த படத்துக்காக அட்லி முதன்முறையாக அனிருத்துடன் இணைந்துள்ளதால் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மற்றும் தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

The post ஷாருக்கான், விஜய் சேதுபதி நடித்த ஜவான் பட ரிலீஸ் தேதி மாற்றம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shah Rukh Khan ,Vijay Sethupathi ,Mumbai ,Atlee ,Jaawan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்