- ஸ்ரீபெரும்புதூர்
- கடம்பத்தூர்
- திருவள்ளூர் மாவட்டம்
- பூந்தமல்லி நகராட்சி பேருந்து பணிமனை
- பூந்தமல்லி
- சுங்குவார்சத்திரம்
ஸ்ரீபெரும்புதூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் தர் (45). இவர், பூந்தமல்லி மாநகர பேருந்து பணிமனையில் டிரைவராக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் நேற்று பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரை மாநகர பேருந்தில் டிரைவராக வேலை பார்த்துள்ளார். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநகர பேருந்தை டிரைவர் தர் ஓட்டிவந்துள்ளார். பணியின்போது தருக்கு திடீரென கடும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் நெஞ்சு வலியை பொறுத்துக் கொண்டு, மாநகர பேருந்தை பத்திரமாக சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, சீட்டில் அமர்ந்தபடியே மயங்கி விழுந்துள்ளார்.
சீட்டிலேயே மயங்கி விழுந்த டிரைவர் தரை கண்டக்டர் மற்றும் சக பயணிகள் மீட்டு, பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டிரைவர் தருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு டிரைவர் தர் பரிதாபமாக பலியானார். எனினும், அவர் பணியின்போது நெஞ்சுவலியால் அவதிப்பட்டும், மாநகர பேருந்தை பத்திரமாக சாலையோரத்தில் நிறுத்தி, 20க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
The post நெஞ்சுவலி ஏற்பட்டபோதும் பயணிகளை காப்பாற்றிய மாநகர பேருந்து டிரைவர்: மருத்துவமனையில் உயிரிழந்தார் appeared first on Dinakaran.