×
Saravana Stores

ஐஎன்எஸ் ராஜாளி விமானப்படை வீரர்கள் பயிற்சி காளசமுத்திரம் ஏரியில்

கண்ணமங்கலம், நவ.20: கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரத்திரம் ஏரியில் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி விமானப்படை வீரர்கள் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ராஜாளி விமான நிைலயம் உள்ளது. 2,320 ஏக்கர் பரப்பளவில் 9.4 கிலோ மீட்டர் நீள ரன்வே கொண்டது. இது ஆசியாவிலேயே மிக நீளமான ரன்வே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமான நிலையம் 1942ம் ஆண்டு இரண்டாம் உலக போரின்போது நேச நாடுகளின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. இங்கு கடற்படை மற்றும் கடலோர காவல் படையின் ரோட்டரி விங் பைலட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த இரும்புலி கிராமம் மலையடிவாரத்தில் பயிற்சி மையம் அமைந்துள்ளது. சுற்றிலும் மலைகள் நிறைந்த அப்பகுதியில், போர்க்காலங்களிலும், பேரிடர் காலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் தாழ்வாக பறந்து மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரும்புலி கிராமம் அருகே உள்ள காளசமுத்திரம் ஏரிக்கு நேற்று ஹெலிகாப்டரில் வீரர்கள் வந்தனர். அங்கு பைலட் லெப்டினட் கமாண்டர் மிதுன் தலைமையில் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டருக்கு தரையிலிருந்து தீயிட்டு கொளுத்தி தங்கள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டி பயிற்சி செய்தனர். சிறிது நேரத்தில் அனைவரும் பயிற்சி முடிந்து ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்றனர். கிராமத்திற்கு திடீரென ஹெலிகாப்டர் பறந்து வந்ததை கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஐஎன்எஸ் ராஜாளி விமானப்படை வீரர்கள் பயிற்சி காளசமுத்திரம் ஏரியில் appeared first on Dinakaran.

Tags : INS Rajali air force ,Kalasamudram lake ,Kannamangalam ,Arakkonam ,INS Rajali ,Kalasamudratram lake ,INS Rajali Air Base ,Arakkonam, Ranipet district ,Indian Navy ,Dinakaran ,
× RELATED ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு