×
Saravana Stores

எல்.ஐ.சி. விவகாரம்.. சர்வாதிகாரம் நீண்ட நாள் நீடிக்காது: துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!!

சென்னை: எல்.ஐ.சி.யின் இணையதள முகப்பு பக்கத்தை இந்தியில் மாற்றியதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்.ஐ.சி.யின் இணையதளத்தை ஆங்கிலத்தில் பார்க்கக் கூட இந்தியில் உள்ள பட்டனை அழுத்திதான் செல்ல வேண்டி உள்ளது. ஒன்றிய அரசின் செயல் இந்தித் திணிப்பு மோகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தமிழ், ஆங்கிலம் உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் பயன்படுத்தும் வகையில் எல்.ஐ.சி. இணையதளத்தை மாற்ற வேண்டும். இந்தி உட்பட எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்துவிட முடியாது. சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post எல்.ஐ.சி. விவகாரம்.. சர்வாதிகாரம் நீண்ட நாள் நீடிக்காது: துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udayanidhi ,CHENNAI ,Udayanidhi Stalin ,LIC ,Union Government ,Dinakaran ,
× RELATED சோழிங்கநல்லூரில் நீர்வழிப்பாதைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு