- தமிழ் நகர்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- குமார் கடல்
- மயிலாடுதுறை
- திருவாரூர்
- நாகை
- தஞ்சை
- புதுக்கோட்டை
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- நெல்லா
- குமாரி
- தின மலர்
சென்னை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் இளம் பகவத் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் கனமழை இருக்கும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.
The post கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(நவ.19) விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.