- மக்கள் குறைதீர்ப்பு வாரியம்
- கரூர்
- மக்கள் குறை நாள்
- மாவட்டம்
- கலெக்டர்
- மாவட்ட கலெக்டர்
- தங்கவேல்
- மக்கள் குறை தீர்க்கும் குழு
- தின மலர்
கரூர், நவ. 19: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த முகாமில், விடுதலை சிறுத்தைகள் கட்சி கரூர் மாநகர மாவட்டம் சார்பில் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூரில் ஏராளமான பஸ்பாடி கட்டும் கம்பெனிகள் இயங்கி வருகிறது.
இதில், சில கம்பெனிகளில் தீ அணைக்கும் கருவிகள், தீயை அணைக்க தேவையான தண்ணீர் தொட்டி, முறைப்படுத்த மின்சாரம், பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காப்பீடு, பாதுகாப்பு இன்றி அரசு விதிகளை பின்பற்றாமல் இயங்கி வருகிறது. இதே போல், தாந்தோணிமலை பகுதியில் உள்ள ஒரு பஸ்பாடி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் உரிய அதிகாரிகளை நியமித்து, பஸ்பாடி கட்டும் நிறுவனங்களை ஆய்வு செய்து முறைப்படுத்திட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post மக்கள் குறைதீர் கூட்டம் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் appeared first on Dinakaran.