×
Saravana Stores

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

டெல்லி: வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு முன்மொழிந்த ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவானது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வருகின்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற விவாகாரத்துறை ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிரண் ரிஜிஜு பேசியதாவது; நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டுமென்றால், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடத்தப்பட வேண்டும், மற்ற 5 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஒரே தேர்தலை நடத்தி நாம் அனைவரும் ஒன்றாக வாக்களிக்க வேண்டும். நாடாளுமன்ற அவைகள் நவம்பர் 25ம் தேதி கூடுகிறது. பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என்று நான் நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

The post நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Kiran Rizhiju ,Delhi ,Kiran Rijiju ,
× RELATED அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் சோதனை