×
Saravana Stores

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடர்; முதல் டெஸ்ட்டில் நிதிஷ்குமாருக்கு வாய்ப்பு?: கேப்டன் பொறுப்பை ஏற்கும் பும்ரா


பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டி கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் பெர்த் மைதானத்தில் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் கடந்த ஒரு வாரமாக தீவிர பயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடைசியாக ஆஸ்திரேலியாவில் 2 டெஸ்ட் தொடர்ளையும் இந்தியா கைப்பற்றியதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதனிடையே பெர்த் டெஸ்ட்டில் ஆடும் லெவனில் இடம்பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரோகித்சர்மா-ரித்திகா தம்பதிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்த நிலையில், பிரசவத்தின் போது உடன் இருந்த ரோகித்சர்மா இன்னும் ஆஸ்திரேலியா புறப்படவில்லை. இதனால் அவர் முதல் டெஸ்ட்டில் ஆடமாட்டார் என உறுதியாகிவிட்டது.

இதனால் பும்ரா கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். சுப்மன்கில் கட்டைவிரல் காயத்தால் விலகியதால் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக ஆட உள்ளார். இதனிடையே மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான நிதிஷ்குமாருக்கு முதல் டெஸ்ட்டில் அறிமுக வீரராக ஆடும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ்தீப் அல்லது பிரசித் கிருஷ்ணா மற்றும் நிதிஷ்குமார் என 4 சீமர்களுடன் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே முன்னாள் கேப்டன் கங்குலி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- இந்திய அணிக்கு கேப்டன் தேவை என்பதால் ரோகித் சர்மா விரைவில் அணியில் இணைவார் என்று நம்புகிறேன்.

அவரது இடத்தில் நான் இருந்திருந்தால் முதல் டெஸ்டில் விளையாட ஆஸ்திரேலியா புறப்பட்டிருப்பேன். ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு கேப்டன் தேவை. இதனை அவர் கவனத்தில் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

3-2 என ஆஸி. தொடரை வெல்லும்
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அளித்துள்ள பேட்டியில், “டெஸ்ட் தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றும் என நம்புகிறேன். இரு அணிகளும் வெற்றி பெறுவதும். தோல்வியடைவதையும் பார்க்கலாம். அதனால் போட்டி டிரா ஆகும் என்று நான் நம்பவில்லை. இந்திய அணி தொடரை வெல்ல வேண்டும் என்றால் விராட் கோஹ்லி, ரிஷப் பன்ட் அதிக ரன்கள் குவிக்கவேண்டும். ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் முக்கிய வீரராக இருப்பார். பும்ராவை சுற்றி அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

The post ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடர்; முதல் டெஸ்ட்டில் நிதிஷ்குமாருக்கு வாய்ப்பு?: கேப்டன் பொறுப்பை ஏற்கும் பும்ரா appeared first on Dinakaran.

Tags : Border-Kawasaki series ,Australia ,Nitish Kumar ,Bumrah ,Perth ,Border-Kawasaki Trophy ,Perth Stadium ,Border-Kawasaki ,Dinakaran ,
× RELATED பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அரசு...