×
Saravana Stores

டிஜிட்டல் கிராப் சர்வே செயலி மூலம் பயிர்கள் விபரங்களை பதிவு செய்யும் பணி

 

காங்கயம்,நவ.18: காங்கயம் அருகே நால்ரோட்டில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் கிராப் சர்வே செயலி மூலம் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் குறித்த விபரங்களை பதிவு செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

காங்கேயம் அடுத்த நால்ரோடு பரஞ்சேர்வழி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கிராப் சர்வே செயலி மூலம் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் குறித்த விபரங்களை பதிவு செய்யும் பணிகளை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீலா பூசலட்சுமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் மின்னணு பயிர்சாகுபடி பரப்பு டிஜிட்டல் கிராப் சர்வே செயலி மூலம் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இதனை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் காங்கயம் வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தாமணி, காங்கயம் தோட்டக்கலை உதவி இயக்குநர் நிவேதக்குமார்,வேளாண்மை அலுவலர்,தோட்டக்கலை அலுவலர்,வேளாண்மை உதவி அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post டிஜிட்டல் கிராப் சர்வே செயலி மூலம் பயிர்கள் விபரங்களை பதிவு செய்யும் பணி appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Tamil Nadu Agricultural University ,Nalroad ,Congo ,Dinakaran ,
× RELATED பையூரில் இன்று காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி