- அறிஞர்கள் பேரவை
- திருச்சி
- திருச்சபையின் அறிஞர்கள் கவுன்சில்
- கிழக்கு ரங்கா இரண்டாம் நிலை
- பள்ளி
- சைவராஜ்
- துணை ஜனாதிபதி
- வைகை மாலை
திருச்சி,நவ.18: திருச்சி அறிவாளர் பேரவை சிறப்புக் கூட்டம் கிழக்கு ரங்கா நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. பேரவை தலைவர் சைவராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் வைகை மாலா வரவேற்றார். நிகழ்ச்சியில் தையல் கலையை ஏன் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்ற தலைப்பில் தையற்கலை வல்லுனர் அமுதா, தன் கையே தனக்கு உதவி என்றும் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் என்றும் தையல் கலையினால் தான் பெற்றுள்ள அனுபவத்தையும் முன்னேற்றத்தையும் முன்வைத்து சிறந்த பெண்களுக்கு ஏற்ற கலை நுணுக்கத்தோடு ஆடை அலங்காரத்தினை அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் தையற்கலை ஒரு நல் வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்.
முன்னோர்கள். பெரியோர்கள் என்றும் வழிகாட்டிகள் என்றும் சமுதாயம் அவர்களைப் போற்றி வணங்கி மகிழ்கின்றது. அந்த வகையில் வள்ளுவப் பெருந்தகை வழிகாட்டுதலின்படி குறள் நெறியின் வழியில் ஒவ்வொரு பெற்றோர்களும் அவரவர்களுக்கு முன்பு வாழ்ந்த பெரியோர்களை வழிகாட்டிகளாக முன்வைத்து அவர்களை வணங்கி பல கடமைகளை நாம் செய்வதற்கு துணை நிற்கின்றது என்றார். தொடர்ந்து ஆலோசகர் பேராசிரியர் முனைவர் அசோகன் வாழ்த்து தெரிவித்து பேசினார். விழாவில் அகில இந்திய வானொலி நிலைய இயக்குனர் வடலூர் வாசகன், பத்ம சுப்புராமன் கலந்து கொண்டு சிறப்பித்தார். முடிவில் பேரவை துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.
The post அறிவாளர் பேரவை சிறப்பு கூட்டம் appeared first on Dinakaran.