×
Saravana Stores

பட்டாசு வெடி விபத்து சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி

ஏழாயிரம்பண்ணை, நவ.17: ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மார்க்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (36). இவரது மகன் பாண்டித்துரை (12). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் தீபாவளி பண்டிகைக்கு வாங்கிய மீதமுள்ள பட்டாசுகளை எடுத்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் பின்புறம் வைத்து வெடித்துள்ளார். அப்போது பட்டாசு வெடித்ததில் சிறு பட்டாசு பொரி பாண்டித்துரை வைத்திருந்த பட்டாசுகளின் மீது விழுந்துள்ளது.

அதனை கவனிக்காத சிறுவன் பட்டாசுகளை எடுக்க சென்றபோது பட்டாசுகள் அவர் மீது வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த வெடி விபத்தில் பாண்டித்துரை படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பட்டாசு வெடி விபத்து சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Ejayarampannai ,Ilayaraja ,Markkanathapuram ,Pandithurai ,Diwali ,
× RELATED வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் பானை ஓடுகள் தரம் பிரிப்பு