×
Saravana Stores

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட 2 மணி நேரத்தில் ரூ.101 கோடி நிதி ஒதுக்கீடு

 

அரியலூர், நவ. 16: வக்கீல்கள் கொடுத்த கோரிக்கை மனு ஏற்கப்பட்டு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட 2 மணி நேரத்தில் ரூ.101 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார் . முன்னதாக ஜெயங்கொண்டம் பயணியர் மாளிகையில் தங்கி இருந்த முதல்வரிடம் அரியலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை மனு அளித்தனர்.

ஜெயங்கொண்டம் நிகழ்ச்சி முடிந்து அரியலூர் கொல்லாபுரத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் வழக்கறிஞர்கள் வேண்டுகோளை ஏற்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட ரூ.101 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் முன்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

The post ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட 2 மணி நேரத்தில் ரூ.101 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Chief Minister ,M.K.Stalin ,Kollapuram ,Dinakaran ,
× RELATED அரியலூர் வந்த தமிழக முதல்வர்...