×
Saravana Stores

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடியை எதிர்தரப்பு சாட்சியாக விசாரிக்க கோரி மனு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எதிர் தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தி,முதல்வருக்கு சம்மன் அனுப்புமாறு கேட்க முடியாது என்று நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இல்லையே எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடியை எதிர்தரப்பு சாட்சியாக விசாரிக்க கோரி மனு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Koda Nadu ,Chennai ,Madras High Court ,Edappadi Palaniswami ,Nilgiris Sessions Court ,Dinakaran ,
× RELATED கொடநாடு வழக்கில் இபிஎஸ்ஸை ஏன் விசாரிக்கக் கூடாது?.. ஐகோர்ட்