- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தலைமை தேர்தல் அதிகாரி
- அர்ஷனா புத்நாயக்
- இந்திய தேர்தல் ஆணையம்
- தின மலர்
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 29.10.2024 முதல் 6.1.2025 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின், ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்திய தேர்தல் ஆணையத்தால், இன்றும், நாளையும், வரும் 23ம் தேதி மற்றும் 24ம் தேதிகளிலும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று, நாளை சிறப்பு முகாம் appeared first on Dinakaran.