×
Saravana Stores

டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி பேருந்துகளை திருச்சி – சென்னை வழித்தடத்தில் அறிமுகம் செய்துள்ளது போக்குவரத்து துறை

சென்னை: டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி பேருந்துகளை போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் கடந்த ஜுன் மாதம் முதல் சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சி.என்.ஜி (CNG), எல்.என்.ஜி (LNG) மூலம் இயங்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது 7 போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 பேருந்துகள் வீதம் 14 பேருந்துகள் சிஎன்ஜி மூலம் இயக்கப்படுகின்றன. தற்போது மதுரை, சேலம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 வீதம் 6 சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளில் முதல் முறையாக, டீசல் எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த சுருக்கப்பட்ட இயற்கை எரிவாய்வு (CNG) பயன்படுத்தி, மறுசீரமைப்பு செய்த பேருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்து திருச்சி – சென்னை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. தொடர்ந்து, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம் போக்குவரத்து கழகங்களிலும் சோதனை அடிப்படையில் சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

The post டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி பேருந்துகளை திருச்சி – சென்னை வழித்தடத்தில் அறிமுகம் செய்துள்ளது போக்குவரத்து துறை appeared first on Dinakaran.

Tags : Transport Department ,Trichy-Chennai ,Chennai ,transport ,Tamil Nadu Transport Department ,Trichy-Chennai route ,
× RELATED அரசு நிலத்தை பட்டா மாற்றம் செய்ததாக...