×
Saravana Stores

பழங்குடியினர் விடுதலை போராட்ட வீரர் பிறந்த தினம்: ஜனாதிபதி, பிரதமர் உட்பட பலர் மரியாதை

புதுடெல்லி: பழங்குடியினர் விடுதலைப் போராட்டவீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். ஜார்க்கண்ட் மாநிலம் உலி ஹாட்டு பகுதியில் பழங்குடியினர் சமூகத்தில் பிறந்த பிர்சா முண்டா, சிறு வயதிலேயே ஆங்கிலேயே ஆட்சி அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடினார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர், பழங்குடியினரின் நிலம் மற்றும் உரிமைகளைக் காக்க கடுமையாக போராடினார்.

இதனால், ‘நிலத்தின் தந்தை’ எனப் பழங்குடினரால் அவர் அழைக்கப்பட்டார். தற்போது இவரின் 150வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி பிர்சா முண்டாவுக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோ ஒன்றையும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஜார்க்கண்ட் மாநிலம் உருவான தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிர்சா முண்டாவில் பிறந்தநாளையொட்டி பீகார் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று கலந்துகொள்ளும் பிரதமர் மோடி ரூ.6000 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி தொடங்கி வைக்கிறார்.

அதேபோல் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் உள்ளிட்ட தலைவர்களும் பழங்குடியினர் விடுதலைப் போராட்டவீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளுக்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக கடந்த 2000ம் ஆண்டு பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் இருந்து பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post பழங்குடியினர் விடுதலை போராட்ட வீரர் பிறந்த தினம்: ஜனாதிபதி, பிரதமர் உட்பட பலர் மரியாதை appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,NARENDRA MODI ,PIRSA MUNDA ,Uli Hattu region ,Jharkhand ,Birsa ,Munda ,
× RELATED பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிக்காவின் உயரிய விருது