காண்டே: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். அங்கு 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 43 தொகுதிகளில் நேற்றுமுன்தினம் வாக்குப்பதிவு முடிந்து விட்டது. இந்த நிலையில்38 தொகுதிகளுக்கு 2ம் கட்டமாக நவ.20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பிரசாரம் செய்தார்.
முதல்வர் ேஹமந்த் ேசாரன் மனைவி கல்பனா சோரன் போட்டியிடும் காண்டே தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
ஜார்க்கண்டில் பாஜ ஆட்சி அமைக்கும். முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணித் தலைவர்கள் ஜார்க்கண்டின் வளமான கனிம வளங்கள் மற்றும் பிற வளங்களைக் கொள்ளையடிக்கிறார்கள். ஏழைகளுக்காக ஒன்றிய அரசு அனுப்பிய ரூ.3.90 லட்சம் கோடியையும் அவர்கள் விழுங்கிவிட்டனர்.
இதனால் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும், ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கான கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது. மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை ஊழல் தலைவர்களுக்கு பகிர்ந்தளிப்பதில் இருந்து ஹேமந்த் சோரனை தடுப்போம். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் மாநிலத்தின் கருவூலத்திற்குத் திருப்பித் தரப்படும். ஜார்க்கண்டில் ஊடுருவல் அதிகரித்து உள்ளதால் பழங்குடியினர், ஓபிசி மக்கள் தொகை குறைந்து வருகிறார்கள். அயோத்தி ராமரை தரிசிக்க இதுவரை ராகுல்காந்தி செல்லவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
The post முதல்கட்டத் தேர்தலுக்குப்பிறகு ஹேமந்த் சோரன் அரசின் கவுன்ட் டவுன் தொடக்கம்: ஜார்க்கண்டில் அமித்ஷா பேச்சு appeared first on Dinakaran.