சென்னை: அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அயலகத் தமிழர் தினம் 2025 ஜனவரி 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது. விழாவில் அயல்நாடுகளில் தமிழினத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களுக்கு ‘தமிழ் மாமணி விருது’, வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் அயலகத் தமிழ் இளைஞருக்கு ‘சிறந்த பண்பாட்டு தூதுவர் விருது’ மற்றும் கல்வி, சமூக மேம்பாடு, மகளிர், வணிகம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழர்களுக்கு ‘கணியன் பூங்குன்றனார்’ விருதை முதல்வர் வழங்குவார்.
அயல்நாடுகளில் சிறந்து விளங்கும் தமிழர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்க, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. அயலகத் தமிழர் தினத்தில் பங்கேற்பது, விருதுக்கு உரியோரை பரிந்துரைப்பது மற்றும் கூடுதல் விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் வலைதளத்தினை (https://nrtamils.tn.gov.in/en/) பார்வையிட்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 12ம் தேதி அயலகத் தமிழர் தினம்: ‘கணியன் பூங்குன்றனார்’ விருது வழங்கப்பட உள்ளது appeared first on Dinakaran.