×
Saravana Stores

ஜப்பான் பேட்மிண்டன் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு தகுதி: லக்‌ஷயாசென் வெளியேற்றம்

குமாமோட்டோ: குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனை பூசனன் ஒங்பாம்ருங்பானை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-12, 21-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆனால் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜங் ஹாவுடன் மோதினார். இதில் லக்‌ஷயா சென் 22-20, 17-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

The post ஜப்பான் பேட்மிண்டன் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு தகுதி: லக்‌ஷயாசென் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Japan Badminton B. V. SINDH ,LAKSHAYASEN ,Kumamoto ,Kumamoto Masters International Badminton Tournament ,Japan ,Women's Singles First ,Weirangan B. V. SINDH ,THAILAND ,WEERANGAN ,ONGBAMRUNGBAN ,Japan Badminton B. ,V. ,Sindhu ,Dinakaran ,
× RELATED முதல் ஒரு நாள் போட்டியில்...