×
Saravana Stores

ராஜஸ்தானில் தேர்தல் அதிகாரியின் கன்னத்தில் அறைந்த சுயேட்சை வேட்பாளர்: வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட ஆதரவாளர்கள்

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. ராஜஸ்தானில் காலியாக இருந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தியோலி உடீயாரா தொகுதியில் காங்கிரஸ் தலைமையால் வாய்ப்பு மறுக்கப்பட்ட நரேஷ் மீனா என்பவர் பாரத் ஆதிவாசி கட்சி ஆதரவுடன் சுயேச்சையாக களமிறங்கினார். இதனால் கட்சியிலிருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சம்ராபத் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டிய நரேஷ் மீனாவை அங்கிருந்து வெளியேற்றுமாறு தேர்தல் அதிகாரி அமீத் சௌத்திரி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தேர்தல் அதிகாரியின் கன்னத்தில் அறைந்தார். இதை அடுத்து நரேஷ் மீனா மற்றும் அவரது ஆதரவாளர்களையும் போலீசார் வெளியேற்றினர். இதை தொடர்ந்து தியோலி உடீயாரா தொகுதி முழுவதும் வன்முறையில் ஈடுபட்ட நரேஷ் மீனாவின் ஆதரவாளர்கள் கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். வன்முறையாளர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசி கலைத்தனர். இந்த வன்முறை தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

The post ராஜஸ்தானில் தேர்தல் அதிகாரியின் கன்னத்தில் அறைந்த சுயேட்சை வேட்பாளர்: வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Congress ,Deoli Udiyarah ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றும் புஷ்கர் கண்காட்சி..!!