×
Saravana Stores

பெரியகுளம் அருகே பாசன கால்வாய் உடைப்பு விரைவில் சரி செய்யப்படும்: பொதுப்பணித் துறையினர் தகவல்


பெரியகுளம்: பெரியகுளம் அருகே புதிய ஆயக்கட்டு பாசன வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் விரைவில் சரி செய்யப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து கடந்த மாதம் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. இதில் புதிய ஆயக்கட்டு பாசன பகுதியான கைலாசபட்டி, கோவில்காடு, லட்சுமிபுரம் பகுதியில் உள்ள 1040 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வது என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் பாசனத்திற்கு நீர் செல்லும் புதிய ஆயகட்டு வாய்க்காலில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வாய்க்கால்களில் தேங்கிய மண்மேடுகளை அகற்றாததால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் வாய்க்காலில் இருந்து வழிந்தோடி வீணாகி ஆற்றில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால் புதிய ஆயகட்டு பாசன கடைமடை விவசாயிகளுக்கு பாசனத்திற்கு செல்லும் நீர் மிகக் குறைந்த அளவில் செல்வதால் பாசனத்திற்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் உடைப்பு பெரிதானால் பாசனத்திற்கு நீர் கிடைக்காத உருவாகும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இந்த நிலையில் உடைப்புகளை சீரமைத்து கடைமடை விவசாயிகளுக்கு பாசனத்திற்கு உரிய நீர் வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, உடைப்புகள் விரைவில் சரிசெய்யப்பட்டு பாசன நீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

The post பெரியகுளம் அருகே பாசன கால்வாய் உடைப்பு விரைவில் சரி செய்யப்படும்: பொதுப்பணித் துறையினர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Public Works Department ,Ayakatu ,Sothupparai dam ,Theni district ,Dinakaran ,
× RELATED திருச்சியில் உலகத் தரத்தில் நூலகம் – டெண்டர் வெளியீடு